search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைகள் எரிப்பு"

    • குப்பைகளை எரிப்பதால் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் புகை மண்டலத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • குப்பைகளை முறைப்படி அள்ளி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியான துப்புரவு தொழிலாளர்களுக்கு நவீன எந்திரம் வழங்கப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் சென்று குப்பைகளை சேகரித்து அதனை உரிய முறையில் தரம் பிரித்து வழங்கி மறு சுழற்சி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இருந்தபோதும் குப்பைகள் கொட்ட இடம் இல்லாததாலும், தொழி லாளர்கள் முறைப்படி குப்பைகளை வாங்க வருவதில்லை என்பதாலும் பொதுமக்கள் நினைத்த இடங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க சாலையில் கொட்டப்படும் குப்பை களை துப்புரவு தொழி லாளர்களே தீ வைத்து எரித்து வருகின்றனர்.

    காலை நேரங்களில் குப்பைகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறது. தெய்வ சிகாமணிபுரம், ஆரோக்கிய மாதா தெரு, பாரதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற நிகழ்வு அடிக்கடி நடந்து வருகிறது. காலையில் வேலைக்கு செல்பவர்களும், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் புகை மண்டலத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்ற னர்.

    குப்பைகளை எரித்தால் காற்று மாசு ஏற்படும் என்பதை வலியுறுத்தி இதற்கு தடை விதிக்கப்பட்டு ள்ளது. இருந்தபோதும் துப்புரவு தொழிலாளர்கள் அடிக்கடி குப்பைகளை எரிப்பது தொடர் கதையாகி வருகிறது. எனவே இதனை தடுத்து நிறுத்தி குப்பைகளை முறைப்படி அள்ளி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×